Monday, July 9, 2007


‘எல்லோருக்கும் வாழ்வதற்கான பொருள் உண்டு. அதை அவரவர்தான் தேடிக் கண்டுபிடிக்க வேண்டும்’ என்பதைப் பள்ளிப் பருவத்திலேயே உணர்ந்துவிட்டேன். ஒவ்வொரு தோல்வியும் ஒரு சின்ன மரணம். ஒவ்வொரு அவமானமும் அதுதான். அவை பலரைச் சிதைக்கின்றன; சிலரைச் செதுக்குகின்றன. தோல்வியையும் துயரத்தையும் உளிகளாக மாற்றிக்கொள்பவர்கள்தான் சிற்பமாகச் சிறப்படைகிறார்கள்.சேலம் மாவட்டம், காட்டூர் கிராமம் என் சொந்த ஊர். படித்தது எளிமையான பள்ளி. என்னுடன் படித்தவர்களில் சிலர் படிக்கும்போதே வாழ்க்கை துரத்த, பிழைப்புக்கு ஓடினார்கள். அவர்கள் கட்டடப் பணிகளுக்கும், மாட்டுவண்டி ஓட்டுவதற்கும் சென்றது என்னை நிறைய யோசிக்க வைத்தது. அந்தச் சூழலிலும் ‘ஜெயிக்க வேண்டும்’ என்கிற பொறி உள்ளுக்குள் தீயாகக் கனன்று சுழன்றது. பொறியை ஊதி ஊதிப் பெரிதாக்கியவர்கள் பெற்றோர். மேடையில் குரலெடுத்துப் பேசும் கலையைத் தந்தையும், ஆழ்ந்து வாசிக்கும் வித்தையைத் தாயும் கற்றுத் தந்தனர். தேசிய மாணவர் படை, சாரண இயக்கம், இந்தி வகுப்புகள் எனப் பள்ளி நாட்களிலேயே நேரத்தை வீணடிக்காமல் பயனுள்ளதாகச் செலவிடக் கற்றுக் கொண்டேன்.
சின்ன வயதிலேயே நான் பார்த்த பல வறிய குடும்பங்கள், ஏழ்மையின் கொடூரங்கள் என்னை ரொம்பவே பாதித்தன. அதுதான் சமூகம் பற்றிய அக்கறையை எனக்குள் கொண்டு வந்தது. கோவை வேளாண்மைக் கல்லூரியில் பட்டப்படிப்பு. அந்த நாட்களில் தான் என்னை நான் இன்னும் தீவிரப்படுத்திக்கொண்டேன். செடி களையும் கொடிகளையும் நேசிக்கக் கற்றிருந்த எனக்கு வேளாண்மையே விருப்பப் பாடமாக அமைந்தது. விடுதி வாழ்க்கையும், அளவற்ற சுதந்திரமும் எனக்குள் சுய கட்டுப்பாட்டை ஏற்படுத்தின. பொறுப்பும், பொறுமையும் நாணயத்தின் இரண்டு பக்கங்கள் என்கிற உண்மையை உணர்ந்தது அப்போதுதான். கவிதையாக விரிந்த கல்லூரி வளாகத்தில், இலக்கியத்தில் ஈடுபாடும் கவிதையில் காதலும் உண்டானது.
கல்லூரிப் பூங்காவில், நானும் என் இலக்கிய நண்பர்களும் அடிக்கடி கூடுவோம். சம வயது உடைய மற்ற பலரிலிருந்து நாங்கள் விலகி இருந்தோம். கோவை ஆர்.எஸ்.புரத்தின் அகண்ட வீதிகளில் விழிகளின் தரிசனத்துக்காகத் தவம் கிடந்த அவர்களிடமிருந்து தனித்திருந்து கவிதையை, இசையை, நடனத்தைப் பற்றியெல்லாம் மரமல்லிகை மரங்களுக் கடியில் மணிக்கணக்கில் நாங்கள் பேசி மகிழ்ந்திருந்தோம். அப்படிக் கூடிய அனைவருமே இன்று ஒவ்வொரு துறையில் உன்னதங்கள் படைத்துக் கொண்டு இருக்கிறார்கள்.கல்லூரி நாட்களில் தேநீரே ஆகாரமானது. புத்தகங்களே ஆகாயமாயின. இலக்கியப் பரிசாகக் கிடைத்த ‘இயேசு காவியம்’ நூலை அன்று இரவே முழு வதும் படித்து முடித்தேன். புத்தகங்கள் படிக்கப் படிக்கக் கொஞ்சம் கொஞ்ச மாக விரிய ஆரம்பித்தேன். இரண்டு மூன்று மணி நேரம்தான் தூக்கம். ‘குடும்பம், தனிச்சொத்து, அரசு ஆகிய வற்றின் தோற்றம், மார்க்சிய நாத்திகம், தாய், அந்நியன் போன்ற நூல்கள் அப்போது அகலமான வாசல்களை எனக்குள் திறந்துவிட்டன.
கல்லூரி நாட்களில் கவிஞராக வேண்டும் என்பதுதான் லட்சியம். நோட்டுப்புத்தங்களின் கடைசி பக்கங்களில், வகுப்பு நடக்கும்போதே கவிதை எழுதுவது தொடர்ந்தது. ‘அன்று நடந்த கவிதைப் போட்டிக்கு எல்லோரும் கவிதையோடு வந்திருந்தார்கள்; நீ கண்களோடு வந்திருந்தாய்’ & மண்ணறிவியல் பாட நோட்டின் கடைசி பக்கம் எழுதிய கவிதை இன்னமும் ஈரமாக நிற்கிறது நினைவில்.
‘நிறையப் படிக்க வேண்டும். முனைவர் பட்டத்துடன்தான் வெளியே வர வேண்டும்’ என்கிற கனவோடு கல்லூரியில் நுழைந்த நான், இளமறி வியலுடன் நிறுத்திக்கொண்டேன். கல்லூரியைத் தாண்டித்தான் உண்மையான வாசிப்பு நிகழும் என்கிற உணர்வுடன் பணி தேட ஆரம்பித்தேன். அப்போது பலரும் ஐ.ஏ.எஸ். தேர்வு எழுதுமாறு வற்புறுத்தினார்கள். அது பற்றி ஒன்றும் தெரியாமலேயே நம்மால் முடியும் என்கிற நம்பிக்கையில் ஒப்புக்கொண்டேன். ஐ.ஏ.எஸ். தேர்வுக்கு விண்ணப்பித்துவிட்டு, அதுபற்றித் தகவல்களைத் தேடி, தட்டுத்தடுமாறி புத்தகங்களைத் திரட்டி படிக்க ஆரம்பித்தபோது, அரசாங்கப் பணியும் கிடைத்தது.
தருமபுரி மாவட்டம், ராயக் கோட்டை கிராமத்தில், வேளாண் அலுவலர் பணி. அப்போது ராயக் கோட்டை மிகவும் பின்தங்கிய கிராமம். ஆங்கில நாளிதழ் வேண்டுமானால், ஒரு வாரத்துக்கு முன்பே முன்பதிவு செய்துகொள்ள வேண்டும். அப்படிப்பட்ட சூழலில் என் ஐ.ஏ.எஸ். போட்டித் தேர்வுக்கான தயாரிப்புகள் ஆரம்பித்தன.
சின்ன குடியிருப்பு அது. பகலிலும் விளக்கு போட்டால்தான் வெளிச்சம் கிடைக்கும். மிகக் குறுகலான ஒரு அறை. பக்கத்து அறையில் எப்போதும் சீட்டாட்டம், கீழே டீக்கடையில் ஊருக்கே கேட்டும்படி சினிமாப் பாடல்கள் ஒலிபரப்பு. சீட்டுக் கச்சேரிக்கும் பாட்டுக் கச்சேரிக்கும் இடையில்தான் ஐ.ஏ.எஸ். தேர்வுக்கான தீவிரத்தில் இருந்தேன்.
காலையில் அவசரமாக உணவு அருந்திவிட்டு, ஒரு பொட்டலத்தில் நான்கு இட்லிகளையும் புளித்த சட்டினியையும் மதிய உணவுக்காக கட்டிக்கொண்டு, டவுன் பஸ் பிடித்து இறங்கி, அந்தந்த கிராமத்திலிருந்து வாடகைக்கு சைக்கிள் எடுத்துக்கொண்டு வேளாண் அலுவலர் பணியைத் தொடர்ந்துகொண்டிருந்த காலம் அது. பேருந்திலும்கூடப் படித்துக் கொண்டே செல்வேன். அந்த நாட்களும் நிச்சயம் அழகானவைதான்! காரணம்... சைக்கிள் பயணம், காய்ந்து போன இட்லி, புளித்த சட்டினி இவைதானே என் வைராக்கியத்தை இன்னும் அதிகப்படுத்தின!
வேளாண் அலுவலராக அப்போது தொட்ட திம்மனஹள்ளி, உத்தனஹள்ளி போன்ற கிராமங்களுக்கு சைக்கிளில் பயணித்தபோது, இன்னும் அதிகமாக மக்களைப் பற்றித் தெரிந்துகொண்டேன். அது, ‘நிச்சயம் நான் வெற்றி பெற வேண்டும்’ என்பதைத் தீவிர மாக்கியது.
ஐ.ஏ.எஸ். தேர்வுக்குத் தமிழ் இலக்கியத்தை ஒரு விருப்பப் பாடமாகத் தேர்ந்தெடுத்தேன். அதில் ஒரு குழப்பம். வேளாண்மை இன்னொரு விருப்பப் பாடம். ‘இரண்டையும் தமிழில் எழுத வேண்டும்’ என்று இந்தத் தேர்வை ஏற்கெனவே எழுதித் தோற்றுப்போன ஒரு நண்பர் குழப்பிவிட்டார். வேளாண்மையை என்னால் தமிழில் எழுத முடியாது. ஏனென்றால், நான் படித்தது ஆங்கிலத் தில்! இந்தக் கேள்விக்கு விடை காண சென்னைக்கு ரயில் ஏறினேன். தலைமைச் செயலகத்தில் இருந்த என் உறவினர் உலகநாதன் மூலமாக விடை கிடைத்தது. பொது அறிவையும், வேளாண்மையையும் ஆங்கிலத்தில் எழுதலாம் என்று தெரிந்தபோதுதான் இழந்த சக்தி திரும்பியது.இப்படித் தமிழகம் முழுவதும் தடுமாறும் இளைஞர்கள் தடம் மாறக் கூடாது என்பதற்காகத்தான் இந்தத் தேர்வை அணுகுவது பற்றி, ‘ஐ.ஏ.எஸ். தேர்வும் அணுகுமுறையும்’, ‘ஐ.ஏ.எஸ். வெற்றிப் படிக்கட்டுகள்’ என்று நூல்களை எழுதினேன்.
ஐ.ஏ.எஸ். தேர்வு எழுதுவது பெரிய விஷயமல்ல; அதில் தேர்ச்சி பெறுவதுகூடப் பெரிய சாதனையல்ல... அதற்குப் பிறகு நாம் எப்படிச் செயல்படுகிறோம் என்பதுதான் முக்கியம். அறிவை அனுபவத்தால் தொடர்ந்து பராமரிக்க வேண்டும். பராமரிக்கா விட்டால் பளபளப்பாக இருக்கிற கோயில்கள்கூடக் குட்டிச்சுவர்களாகிவிடும்!
என்னுடைய பணிக்குப் பரிசை நான் ஒரு போதும் எதிர்பார்த்ததில்லை. சிறந்த பணியே செயல்பட்டதற்கான பதக்கம். அப்போது ஏற்படும் திருப்தியே விருது!தூர் வாரப்பட்ட கால்வாயில் நீர் ஓடுவது பரிசு. நேர்த்தியாகப் போடப்பட்ட சாலைகளில் மக்கள் பயணிப்பதே பரிசு. நிலவொளிப் பள்ளிகளில் படிக்கிற மாணவர்கள் மற்ற மாணவர்களுக்கு இணையாக மதிப்பெண்கள் பெறுவதே எனக்குக் கிடைத்த பெரிய விருது. நான் சாராட்சியராகப் பணியாற்றிய நாகப்பட்டினத்திலிருந்தும், கூடுதலாட்சியராகப் பணியாற்றிய கடலூரிலிருந்தும், ஆட்சியராக இருந்த காஞ்சிபுரத்திலிருந்தும் தலைமைச்செயலகம் வருகிற பொதுமக்கள் இப்போதும் என்னை வந்து எட்டிப் பார்த்துவிட்டுப் போவதுதான் என் பணிக்குக் கிடைக்கிற அங்கீகாரம்!
மதுரையில் ஒழுங்கு நடவடிக்கை ஆணையராக இருந்தபோதும் மக்களுக்கும் எனக்கும் இடையே இருந்த இடைவெளி குறையவில்லை. மதுரையில் வாசிப்பவர் கூட்டமைப்பு உருவாக்க உதவியிருக்கிறேன். அந்த காலகட்டத்தில்தான் எம்.பி.ஏ., முடித்தேன். எம்.ஏ., ஆங்கிலம் படித்தேன். சம்ஸ்கிருதம் படித்தேன். திருக்குறளில் மனிதவள மேம்பாடு என முனைவர் பட்டத்துக்கு ஆய்வு செய்தேன். பத்து நூல்கள் எழுதினேன். நூறு ஆங்கிலக் கட்டுரைகள் எழுதி னேன். இருநூறுக்கும் மேற்பட்ட வானொலி உரைகள் வழங்கினேன். முன்னூறுக்கும் மேற்பட்ட கூட்டங் களில் இளைஞர்களுக்காகப் பேசி னேன். மூன்று ஆய்வாளர்கள் என் நூல்களில் முனைவர் ஆய்வு செய்ய உதவினேன். இப்படி மதுரை என்னை இன்னொரு பரிமாணத்துக்கு அழைத்துச் சென்றது.
என் குடும்பத்தில் முதல் ஐ.ஏ.எஸ். அதிகாரி நான். இது தலைமுறைகளின் கனவு. அது பலித்தது என் காலத்தில்! துயரமும் சூழலும் நம்பிக்கையின் காட்டாற்றுப் பயணத்தை நிறுத்திவிட முடியாது. நம்மை நாமே கடந்து செல்வதுதான் வளர்ச்சி. நமக்குள்ளேயே அடுத்த தலைமுறையை அடையாளம் காண்பதுதான் முன்னேற்றம். அந்தத் தேடுதல்தான் என் இலக்கு, பயணம், அனுபவம் எல்லாமே!
*******
இறை நம்பிக்கை
அடுத்தவர்கள் நலனுக்காகச் செய்யும் ஒவ்வொரு செயலும் பிரார்த்தனைதான்! ஒவ்வொரு நிகழ்வையும் விழிப்பு உணர்வுடன் அணுகினால் வாழ்க்கையே வழிபாடுதான்!
ஜெயித்தது எப்படி?
சுயநலம் குறித்து சிந்திக்காமல் பணியாற்றத் தொடங்குகிறபோதே ஜெயிக்க ஆரம்பித்து விடுகிறோம். வெற்றி என்பது நம்மீது எறிந்த கற்களால் எழுப்புகிற கோபுரம்!
இளைஞர்களுக்குச் சொல்ல விரும்புவது..
தேடுதலை நிறுத்திவிடாதீர்கள். குறுக்குவழிகள் எல்லாம் நேர்வழிகளைக் காட்டிலும் நீளமானவை!
கெட்ட பழக்கங்களை விட்டது எப்படி?
கெட்ட பழக்கங்கள் என எதுவும் இல்லை. விட்ட பழக்கம் ஒன்று உண்டு. ஒவ்வொரு உயிரிலும் நம் பிரதிபலிப்பு இருக்கிறது என்பதை உணர்ந்தபோது, அசைவம் சாப்பிடுவதை விட்டுவிட்டேன்!
ஒரே கனவு
அழகான தோட்டம், அடர்ந்த தோப்புகள், கயிற்றுக்கட்டிலில் அமர்ந்து மெல்லிய இசையைக் கண்மூடி ரசிக்கும் தனிமை...இயற்கையோடு நெருங்கிய சூழலில் அத்தனை அடையாளங் களையும் உதிர்த்துவிட்டு மறுபடியும் குழந்தையைப் போல மாறும் பக்குவம்... எல்லா சத்தங்களிலிருந்தும் விடுதலை...அமைதியான இனிமை...நெருடல் இல்லாத வாழ்வு...வலியில்லாத மரணம்....சாத்தியப்படுமா?

85 comments:

Unknown said...

Ella katkalum sirpamahivittal!!!!!
Not good.

Arun J said...

that's very nice

Unknown said...

தோல்வியையும் துயரத்தையும் உளிகளாக மாற்றிக்கொள்பவர்கள்தான் சிற்பமாகச் சிறப்படைகிறார்கள் -


அருமையான எழுத்துக்கள் !!!
உமது எழுத்துக்களின் ஆழமும் உண்மையும் ஒவ்வொரு மனிதனும் உணர்ந்ந்தால் வாழ்கை இனிக்கும்!!!
மனதில் நம்பிக்கை வளர்க்க உரம் ஆகும் உமது எழுத்துப் பணி தொடர வாழ்த்துக்கள் !!!

Aravinth said...

Respected sir,
very very nice one sir lot of people will change their mind set after reading ur profile.I think i am the first person going to do that. I will send these details to my friends soon. Very very thanks sir.

Thanks & Regards
M.Aravinth

சி.பி.செந்தில்குமார் said...

சார். நான் உங்கள் எழுத்துக்களின் ரசிகன்,.. நீங்க பிளாக் எழுத வந்தது சந்தோஷம்

வை.கோபாலகிருஷ்ணன் said...

மதிப்பிற்கும், மரியாதைக்கும் உரிய ஐயா, அவர்களுக்கு வணக்கம்.

நான் உங்கள் பேச்சுக்களையும், எழுத்துக்களையும் மிகவும் ரசித்து மகிழ்வதுண்டு.

தாங்கள் ப்ளாக்கில் எழுதுவதுபற்றி இன்று எனக்கு ஒரு நண்பர் மின்னஞ்சல் மூலம் தெரிவித்திருந்தார்.

மகிழ்ச்சியுடன் வந்து படித்து முடித்தேன்.

வழக்கம்போல, உங்கள் அனுபவம் வாயிலாக, இளைஞர்களுக்கு, நல்ல அறிவுரைகள் வழங்கியுள்ளீர்கள்.

என்னை மிகவும் கவர்ந்த வரிகள்:

//ஒவ்வொரு உயிரிலும் நம் பிரதிபலிப்பு இருக்கிறது என்பதை உணர்ந்தபோது, அசைவம் சாப்பிடுவதை விட்டுவிட்டேன்!//


பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.

அன்புடன்,
வை.கோபாலகிருஷ்ணன்
gopu1949.blogspot.com

Kousalya Raj said...

வணக்கம்

சார் உங்களின் எழுத்துக்கள் ஒரு தன்னம்பிக்கை டானிக்...எந்த வித வெளிபூச்சும் இன்றி யதார்த்தமாக விவரிக்கும் விதத்தை நான் பலமுறை படித்து வியந்திருக்கிறேன்...உங்களின் எழுத்துக்கள் புத்தகங்களில் எங்கே பார்த்தாலும் விரும்பி படிப்பேன்.

நீங்கள் இணையத்தில் தொடர்ந்து எழுதவேண்டும் என்பது என் போன்றோரின் விருப்பம்.

வாழ்த்துக்களும், பாராட்டுகளும்...

நன்றி

murugesan said...

i love ur
history

murugesan said...

sir i am doing project about novel
and yourself i need your help sir
by
ramajayam.d
M.A.TAMIL LIT
BDU,TRICHI-24

Unknown said...

MY EMAIL ID
thendralramji@gmail.com

ம.தி.சுதா said...

தங்களின் எழுத்தை படித்த நினைவிருக்கிறத ஆனால் இப்படி ஒரு அறிமுகம் கிடைக்குமென நான் நினைக்கவே இல்லை நன்றி கடவுளே...

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
என் நூறாவதுபதிவை திருடிய சுயநலக்காரி..

ம.தி.சுதா said...

தங்கள் எழுத்தை இதிலேயாவது அடிக்கடி காண முடிவதையிட்டு மிக்க சந்தோசம்..

Chittoor Murugesan said...

"தோல்வித்தொட்டிலில்
தூங்கிப்போய் விட்டால்
சமாதியாகுமே ..
காலம் வெல்லுமே தோழா"ங்கறிங்க.

நல்ல கருத்துக்கள் - இளைய தலைமுறைக்கு நிச்சயம் தேவையான கருத்துக்கள்.

நடையில் அடர்த்தி அதிகம்
பாரா பிரிச்சாலும் மொத்தையா இருக்கு.

இத்தனை நீளப்பதிவை போடும்போது
ஒரு பாராக்களையே சனம் தவற விடும் ஆபத்திருக்கிறது.

மோனிபுவன் அம்மா said...

"சுயநலம் குறித்து சிந்திக்காமல் பணியாற்றத் தொடங்குகிறபோதே ஜெயிக்க ஆரம்பித்து விடுகிறோம். வெற்றி என்பது நம்மீது எறிந்த கற்களால் எழுப்புகிற கோபுரம்!

மிகவும் அருமையான பதிவு
படிக்கும்போதே கண்களில் நீர் வருகிறது.

Priya said...

வணக்கம் சார்
தங்களின் அறிமுகமும், எழுத்துக்களை கண்டு மகிழ்கிறேன்!

நன்றி
ப்ரியா

சமுத்ரா said...

உங்கள் கனவு மெய்ப்பட வாழ்த்துக்கள்

ப.கந்தசாமி said...

வருக, வருக, இறையன்பு அவர்களே. நீங்கள் ஒரு விவசாயப் பட்டதாரி என்று அறிய மிக்க மகிழ்ச்சி. எந்த வருடம் படிப்பை முடித்தீர்கள் என்று தெரிந்தால், நான் உங்களுக்கு வகுப்பு எடுத்தேனா என்று சொல்ல முடியும். நான் மண்ணியல் துறையில் வேலை பார்த்து ஓய்வு பெற்றவன்.

தொடர்ந்து எழுதுங்கள்.

Rathnavel Natarajan said...

உங்களது
பதிவைப் பார்த்ததும் விவரிக்க முடியாத சந்தோசம்.
தொலைகாட்சி நேர்காணலிலும் புத்தகங்களிலும் உங்களை கண்டது. நிறைய சந்தோஷம்.
தொடர்ந்து எழுதுங்கள் ஐயா.
நன்றி.

சிநேகிதன் அக்பர் said...

சோர்ந்து கிடக்கும் ஒவ்வொருவருக்கும் உற்சாக டானிக் இந்த கட்டுரை.

இந்த போஸ்ட் 2007 ல் எழுதப்பட்டுள்ளது. இது போல இப்போதும் தொடர்ந்து எழுதினால் மகிழ்வேன். கற்றுக்கொள்வேன்.

தாராபுரத்தான் said...

மரியாதைக்குரியவரின் மதிக்கதக்க வார்த்தைகள்..

சங்கரியின் செய்திகள்.. said...

அன்பின் ஐயா,

தங்களின் நீண்ட கால ரசிகை நான்.....தங்கள் எழுத்துக்களில் மனிதம் மிளிர்வதில் பெருமை கொள்பவள். மிக்க மகிழ்ச்சி ஐயா.

//அழகான தோட்டம், அடர்ந்த தோப்புகள், கயிற்றுக்கட்டிலில் அமர்ந்து மெல்லிய இசையைக் கண்மூடி ரசிக்கும் தனிமை...இயற்கையோடு நெருங்கிய சூழலில் அத்தனை அடையாளங் களையும் உதிர்த்துவிட்டு மறுபடியும் குழந்தையைப் போல மாறும் பக்குவம்... எல்லா சத்தங்களிலிருந்தும் விடுதலை...அமைதியான இனிமை...நெருடல் இல்லாத வாழ்வு...வலியில்லாத மரணம்....சாத்தியப்படுமா?//

மனம் இருந்தால் மார்கம் உண்டு அல்லவா. தாங்களே இறையன்பு ஆயிற்றே! தங்களுக்கு எளிமையாக சாத்தியமாகக் கூடியதுதான்! நன்றி ஐயா.

Ashok D said...

தினத்தந்தி இணைப்பு புத்தகத்தல முதன் முறையா உங்கள் எழுத்த வாசித்து இருக்கிறேன்... (between 92 - 95’s I think)

Welcome to Blog :)

kowsy said...

அருமையான பதிவு. இன்றுதான் பார்த்தேன் உங்கள் எழுத்துக்களின் ஆழத்தை. தொடர்ந்து கொள்ளுங்கள் வாழ்த்துக்கள்.

http://kowsy2010.blogspot.com/search/label/vanoli%20vakku

அரபுத்தமிழன் said...

தங்களின் பெயரே இனிக்கும் போது வார்த்தைகளுக்குச் சொல்லவா
வேண்டும். தங்களின் பதிவுகளை மிக ஆவலுடன் எதிர்பார்க்கிறோம் சார்.

thirumathi bs sridhar said...

யாரோ ஒருவர் அனுப்பிய மெயிலின் லின்க் வழியாக வந்தேன்.

தங்களின் பதிவு கண்டு வியப்படைந்தேன்.தங்களின் புத்தகங்கள் எதுவும் படித்ததில்லை,ஆனால் எங்க நாகையில் உங்களைப் பற்றி தெரிந்தவர்கள் சிறந்த மனிதர் என்று சொன்னதை கேள்விப்பட்டுள்ளேன்.பிறகு சில தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தங்களின் கருத்துக்களை தெரிந்து கொண்டதுண்டு.

//இளைஞர்களுக்குச் சொல்ல விரும்புவது..
தேடுதலை நிறுத்திவிடாதீர்கள். குறுக்குவழிகள் எல்லாம் நேர்வழிகளைக் காட்டிலும் நீளமானவை//

தடுமாறும் இளைஙர்களுக்கு சிறப்பான அறிவுரை.

தொடர்ந்து எழுதுங்கள்.

மெயில் அனுப்பிய நபருக்கு என் நன்றிகள்.

thirumathi bs sridhar said...

தங்களின் கனவு நிறைவேற வாழ்த்துகள் சார்.

Anonymous said...

வாழ்த்துகள் சார்.

பிரபாஷ்கரன் said...

சார் உங்கள் எழுத்துக்கள் நன்கு அறிமுகம் .நீங்கள் ப்ளாக் எழுதுவது மிக்க மகிழ்ச்சி . நீங்களும் மக்கள் நலனுக்காக பாடுபடும் உன்னத நபர் தொடந்து எழுதுங்கள் எங்கள் இளைய சமுதாயம் பயன் பெறட்டும் .

writerprabashkaran.blogspot.com

சிவ.சி.மா. ஜானகிராமன் said...

//சுயநலம் குறித்து சிந்திக்காமல் பணியாற்றத் தொடங்குகிறபோதே ஜெயிக்க ஆரம்பித்து விடுகிறோம். //

வணக்கம் சார்,
உங்களைது எழுத்துக்களுக்கு நான் ஏற்கனவே ரசிசகன்..

இனி உங்கள் எழுத்துக்களை இங்கும் காணலாம் என்பதில் இரட்டிப்பு மகிழ்ச்சி..
வாழ்த்துக்கள்.

http://sivaayasivaa.blogspot.com

sakthi said...

வணக்கம் சார் ,
பதிவுலகமான எழுத்து உலகத்திற்கு வருக வருக !வாழ்த்துக்கள் ,பதிவுலகத்தில் முத்திரை பதிக்க போகும் உங்களின் வைர எழுத்துகளின் முதல் பதிவில் பின்னூட்டம் இட்டவர்களில் நானும் இருந்தேன் என்பது மிக பெருமை .தங்களின் வேலை பளுவை தாண்டி பதிவு எழுத உள்ளது மிக ஆனந்த மகிழ்ச்சி .
அன்புடன் ,
கோவை சக்தி

சேக்காளி said...

பணியில் இருக்கும் போது, பணியில் சேருவதற்கு முன்னால் கொண்டிருந்த கொள்கைகளிலிருந்து விலகாமல் இருப்பது என்பது பற்றி புத்தகம் எழுதியிருக்கிறீர்களா?

மனம் திறந்து... (மதி) said...

பதிவுலகில் ஒரு பகலவன்!

பாரைப் படித்ததாலேயே
படிப்பாரை ஊக்குவிப்பவன்!

உழைப்பால் வென்றவன்
உயர்ந்து நின்றவன்!

எளிய மனமும்
அரிய சிந்தனையும்
எளிதில் இணைவது அரிது என
எளிதாய் நிறுவியவன்!

வாருங்கள் அன்பரே!
தாருங்கள் உம் தாக்கத்தை!
போக்குங்கள் எம் தாகத்தை
நோக்குங்கள் பின் சாகசத்தை!

munril said...

அருமையான தொடக்கம். அடக்கமான நடை. முடியும் என்ற வேட்கை. ஒரு விடி வெள்ளி மின்வானைக் கீறிக்கொண்டு வெளிவருகிறது. வெறும் விண்மீனல்ல விடிவெள்ளி.இப்படித்தான் எழுது என்று மனம் சொன்னது. ஐயரீர் நுங்கள் எழுத்தில் தென்றல் தவழ்கிறது. எங்கே கற்றுக் கொண்டீர்கள் இந்த விந்தையை!
தோழமையுடன் ச.உதயன்.

N.D. NATARAJA DEEKSHIDHAR said...

ஸ்ரீ, மிக அருமையான தொடக்கம். தங்கள் வழிகாட்டுதல்கள் மேலும் பலரின் வாழ்க்கையை வளமாக்கட்டும். நி.த. நடராஜ தீக்ஷிதர் http://natarajadeekshidhar.blogspot.com

J.P Josephine Baba said...

மதிப்பிற்குரிய ஐயா,
உங்கள் எழுத்துக்கள் வளரும் தலைமுறைக்கு வழிகாட்டுவதும் ஆக்கபூர்வமாக சிந்தித்து தன்னம்பிக்கையுடன் வாழ வழி செய்கின்றதுமாக இருக்கின்றது. தங்களுடைய பதிவில் கடந்து சென்றதை பெறுமையாக எண்ணுகின்றேன்.

தஞ்சை கோ.கண்ணன் said...

இறையே அன்பு ! வாழ்க ! வளர்க ! வெல்க ! மக்கள் இதயங்களில் வாழ்வதைவிட வேறென்ன
வேண்டும் ?
செய் பணியே இறை பணி ! இயல்பாக வந்துற்றது உங்களுக்கே ! உங்களைப் பார்த்து நம் இளைஞர்கள் உறுதியாக உயர்வர் ! சொல்ல வார்த்தைகள் இல்லை ! எழுத எழுத்துகள் இல்லை ! ஆல் போல் பரவி அருகு போல் தழைத்து ஞாயிறும் நிலவும் போல எஞ்ஞான்றும் வாழ்கவே ! கோவை வேளாண் பல்கலைக் கழகம் ஈன்ற செல்வம் என்றதும் என் ஆருயிர் நண்பன் நினைவில் வாழும் விரிவாக்க கல்வி துறை தலைவர் முனைவர்.கே.பி. சிறிபால் அன்புருவம் என் முன் நிழலாடுகிறது. கண்களோ கண்ணீரில் !

Marie Mahendran said...

அறிவை அனுபவத்தால் தொடர்ந்து பராமரிக்க வேண்டும். பராமரிக்கா விட்டால் பளபளப்பாக இருக்கிற கோயில்கள்கூடக் குட்டிச்சுவர்களாகிவிடும்! என்ன வார்த்தைகள் மூத்தோர் சொல் மந்திரம்தான் உங்கள் அனுபவம் எங்களக்குள் வீரியத்தை விதைக்கின்நது சார்....

Marie Mahendran said...

உங்கள் அருமையான கருத்துக்களை நிறைய எழுதுங்கள்..தன்னம்பிக்கைதான் நம் சமுகத்திற்கு நிறைய தேவை.

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

சகோ.IRAIANBU I.A.S.,அவர்களே,

வாழ்வில் முன்னேறத்துடிக்கும் இளைஞர்களுக்கான நல்லதொரு ஊக்கம் தரும் வார்த்தைகள்.

////ஐ.ஏ.எஸ். தேர்வு எழுதுவது பெரிய விஷயமல்ல; அதில் தேர்ச்சி பெறுவதுகூடப் பெரிய சாதனையல்ல... அதற்குப் பிறகு நாம் எப்படிச் செயல்படுகிறோம் என்பதுதான் முக்கியம்.////...இதுவும்.,

////சுயநலம் குறித்து சிந்திக்காமல் பணியாற்றத் தொடங்குகிறபோதே ஜெயிக்க ஆரம்பித்து விடுகிறோம். வெற்றி என்பது நம்மீது எறிந்த கற்களால் எழுப்புகிற கோபுரம்!////...இதுவும்.,

...பொன்னெழுத்துக்கள்..!

மிக்க நன்றி.

பாட்டு ரசிகன் said...

இனி வலைப்பூக்கள் அர்த்தப்படும்...

தங்களின் ரசிர்களில் ஒருவன்...

கவிதை வீதி... // சௌந்தர் // said...

மரியாதைகலந்த வணக்கம்.

தாங்கள் பல்வேறு அரசுப் பணிகளில் ஆற்றிவரும் சாதனைகளும் அவற்றில் தங்களின் பக்குவமும் நான் மட்டுமல்ல தமிழகமே திரும்பிப்பார்த்திருக்கிறது...


அதை தவிர்த்து மிகவும் என்னைகவர்ந்தது தங்களின் இலக்கிய பணியே பொதுவாக அரசு துறையில் இருப்பாவர்கள் இலக்கிய ஆர்வம் இருந்தாலும் அதைவெளிப்படுத்துகிற நேரமும் காலமும் இருந்ததில்லை ஆனால் அதில் தாங்கள் விதிவிலக்காய் ஜொலிக்கிறீர்கள்..

தங்களின் அத்தனை புத்தகமும் வாசித்தவன் என்ற பெருமையும், அவற்றிக்கெல்லாம் ரசிகன் என்ற அந்தஸ்த்தும் என்னிடம் உள்ளது...

தற்போது பதிவுலகம் வந்திருப்பது எங்களைப்போன்ற வலைப்பதிவர்களை மகிழ்ச்சியடைய செய்திருக்கிறது.

தங்களின் இலக்கிய பணியை பின்தொடரும் ஒரு நிழல் நான்..

அன்புடன்..
கவிதை வீதி சௌந்தர்.

SEKAR70 said...

அருமையான பதிவுகள்.
நேரடியாக உங்களை தெடர்பு கொள்ள முடியாவிட்டாலும்.இந்தபதிவுகள் மூலம் உங்களை தொடர்பு கொண்டமைக்கு மிக்க சந்தோஷம்.

ramkaran said...

வாழ்த்துக்கள்! தெளிவான, சிந்தனைகுரிய கருத்துகள். நம்முடைய சொல்லிலும், செயலிலும் சமூக அக்கறை வேண்டும். மக்களுக்கு செய்யும் சேவையே மகேசனுக்கு செய்யும் சேவையாகும்.
கற்றல்! தெளிதல்! தெளிவித்தல்! என்ற கொள்கையுடன்
அன்பன்
இராம்கரன்
www.tamiljatakam.blogspot.com

பிறரிடம் அன்பு செய் said...

ஒவ்வொரு உயிரிலும் நம் பிரதிபலிப்பு இருக்கிறது என்பதை உணர்ந்தபோது, அசைவம் சாப்பிடுவதை விட்டுவிட்டேன்!
வெற்றி என்பது நம்மீது எறிந்த கற்களால் எழுப்புகிற கோபுரம்!
எல்லோருக்கும் வாழ்வதற்கான பொருள் உண்டு. அதை அவரவர்தான் தேடிக் கண்டுபிடிக்க வேண்டும்
ஒவ்வொரு தோல்வியும் ஒரு சின்ன மரணம்.
மிக மிக அருமையான வரிகள்!

பிறரிடம் அன்பு செய் said...

ஒவ்வொரு உயிரிலும் நம் பிரதிபலிப்பு இருக்கிறது என்பதை உணர்ந்தபோது, அசைவம் சாப்பிடுவதை விட்டுவிட்டேன்!
வெற்றி என்பது நம்மீது எறிந்த கற்களால் எழுப்புகிற கோபுரம்!
எல்லோருக்கும் வாழ்வதற்கான பொருள் உண்டு. அதை அவரவர்தான் தேடிக் கண்டுபிடிக்க வேண்டும்
ஒவ்வொரு தோல்வியும் ஒரு சின்ன மரணம்.
மிக மிக அருமையான வரிகள்!

rajamelaiyur said...

Very Good post

Navaneetha Krishnan,A.H. said...

very thought-provoking and interesting. please write more.may i request you to view my website "uppu-muthu.blogspot.com ?

பழ.மாதேஸ்வரன், குருவரெட்டியூர் - 638504 said...

மதிப்பிற்குரிய ஐயா அவர்களுக்கு , "தான் உயர்ந்து மற்றவர்களையும் உயர வைக்க வேண்டும்" என்ற சமுக நல்லெண்ணம் கொண்ட உங்களுக்கு "இனி எல்லாம் வெற்றியே" அடுத்த தலைமுறை தெளிவான பாதையில் எழுத்தின் வழியே இட்டுச் செல்லும் உங்களுக்கு என் மனமுவந்த வாழ்த்துக்கள் . நட்புடன் குரு.பழ. மாதேசு. குருவரெட்டியூர் www.kavithaimathesu.blogspot.comயும் உயர வைக்க வேண்டும்" என்ற சமுக நல்லெண்ணம் கொண்ட உங்களுக்கு "இனி எல்லாம் வெற்றியே" அடுத்த தலைமுறை தெளிவான பாதையில் எழுத்தின் வழியே இட்டுச் செல்லும் உங்களுக்கு என் மனமுவந்த வாழ்த்துக்கள் . நட்புடன் குரு.பழ. மாதேசு. குருவரெட்டியூர் www.kavithaimathesu.blogspot.com

சேலம் தேவா said...

இளைஞர்களுக்கு தன்னம்பிக்கையையும், விழிப்புணர்வையும் ஏற்படுத்தும் உங்கள் பதிவுகளை இந்த தளத்தில் அடிக்கடி எதிர்பார்க்கிறேன்.மிக்க மகிழ்ச்சி..!!

இராஜராஜேஸ்வரி said...

அடுத்தவர்கள் நலனுக்காகச் செய்யும் ஒவ்வொரு செயலும் பிரார்த்தனைதான்! ஒவ்வொரு நிகழ்வையும் விழிப்பு உணர்வுடன் அணுகினால் வாழ்க்கையே வழிபாடுதான்!/

மிக கவர்ந்த வரிகள். பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.

ALAVANDHAN (ஆளவந்தான்) said...

\\\அளவற்ற சுதந்திரமும் எனக்குள் சுய கட்டுப்பாட்டை ஏற்படுத்தின.

வெற்றி என்பது நம்மீது எறிந்த கற்களால் எழுப்புகிற கோபுரம்!

குறுக்குவழிகள் எல்லாம் நேர்வழிகளைக் காட்டிலும் நீளமானவை!///

மிக அருமையான, ஆழமான, உண்மையான அனுபவ மொழிகள்

நன்றியுடன்...

keerthana subburaj said...

ஒவ்வொரு உயிரிலும் நம் பிரதிபலிப்பு இருக்கிறது என்பதை உணர்ந்தபோது, அசைவம் சாப்பிடுவதை விட்டுவிட்டேன்!
respected sir,
this thought is very nice.i also follow this thanks for your kind information

vijayabaskar.s said...

very very nice.....

ஜோதிஜி said...

http://deviyar-illam.blogspot.com/2010/12/blog-post_27.html

வணக்கம்

உங்களுக்கு நேரம் இருக்கும் போது படித்துப் பாருங்க. தூரத்தில் இருந்து கொண்டே உங்களை கவனித்துக் கொண்டு இருக்கின்றேன்.

Lakshmanan17 said...

பணிக்கு பரிசு என்பது அந்த பணியின் விளைவுகளே என்பதுதான் சித்தாந்தம். ரசித்தேன். என் கடன் பணி செய்து கிடப்பதுவே. உண்மை.
லட்சுமணன்
சேலம்
9080213233

Rampriya said...
This comment has been removed by the author.
Rampriya said...

"அழகான தோட்டம், அடர்ந்த தோப்புகள்,.." - All your dreams will come true :-))

Saravanan / C Subramanian said...

Sir,

Could you tell your face book id, sir?

Unknown said...


TOday,20 09 12 i saw the u r programme, in podgai channel 4pm to 5pm speech about war style in kambaramaynam,used by rama, very informative message, all around ancient history,eg mongoliy war style, THANKS ,(any mistake in english sorry this much i know, i know tamil but i do no how to type in computer)

sripriyaimpex - Our heart throbs for Customers Satisfaction said...

எனது அபிமான எழுத்தாளரும், யதார்த்தவாதியான திரு. இறையன்பு ஐயா அவர்களுக்கு,

சினிமாவிலும், அரசியலிலும் உறங்கிக் கிடக்கும் இளைய சமுதாயத்தைத் தட்டி எழுப்பும் அறிவு சார்ந்த வார்த்தைகள்... ஆன்மீகத்தைக் கூட அசிங்கப்படுத்திக்கொண்டிருக்கும் இக்காலகட்டத்தில் சமுதாயத்தைத் திருத்த உங்கள் வார்த்தைகள் கண்டிப்பாய் உதவும் என்பதில் ஐயமில்லை. அனைத்து பென்சில் உள்ளேயும் கார்பன் போல் அனைத்து மனிதர்கள் உள்ளேயும் நல்ல எண்ணங்களும், தனித் திறமைகளும் உள்ளதென்றாலும், உங்கள் அறிவுரைகள் கூர் தீட்ட உதவும் என்பதில் ஐயமில்லை. உங்கள் எழுத்துப் பணி தொடர வாழ்த்துக்கள். Jc. S. Murali, President, JCI Vellore Metro.
http://jcivelloremetro.jimdo.com

Unknown said...

superb article sir, youth like me motivated so much and got the energy to win the struggle by your speech

Unknown said...
This comment has been removed by the author.
Several tips said...

மிகவும் அருமை

saravanan said...

Respected sir,
Your post is awesome feeling.
You are real Indian sir...
.today I like to watch podhigai tv "kallori kalangal"..yesterday u told chimney story is very super sir..
Really I love it..

Unknown said...

Sir,I had completed by BE(CSE) in this year 2015 but my passion is to do IAS will you please guide me to do my IAS.But everyone around me tells not to do IAS.Please Sir I request you to guide me to do my IAS.

Unknown said...

Valkai parama irukkum pothu vungalai ninaithu kolven happy ya irukkum. Thanks

Unknown said...

Sir iraianbu ias avargala neengal pesum Ella negalchigalium Nan parkeeran romba usefulana visaiangal Ellam sullukeergal enathu nantreegali therivithu kolgitan maelum neegal neeria visahahthai solla vendum nantrr

Unknown said...

அருமையான வார்த்தைகள்....படிக்கும் போதே ஒரு தெளிவு கிடைக்கின்றது....

Unknown said...

Thanks for your tiring service to our Nation
Regards : Shankar.

vijay said...

"கெட்ட பழக்கங்கள் என எதுவும் இல்லை. விட்ட பழக்கம் ஒன்று உண்டு"

நன்றி மற்றும் வாழ்த்துக்கள்

Unknown said...

Respected Sir,

Thank you for sharing this and many other things through Media and Books.
I will reduce Non-veg food, after reading this article.
Your Programme "Kalloori Kaalangal" at Podhigai tv is very good and informative sir.
Keep Going... Thank you and Love you Sir...

This is Shanmuganathan.
ashaun492@gmail.com

Unknown said...

Sir its a strange for life path...Thank U sir.

Unknown said...

Sir its a strange for life path...Thank U sir.

Unknown said...

Sir I am tamizharasan.G from trichy now I am studying MNT IAS Academy in chennai. something I don't know how do prepared for exam so I request kindly give some idea to get exam mainly current affairs my emai- tamiizh01@gmail. Com

Unknown said...

respected sir as you said many things in your last episodes . u said for every thing iam very thankful to have such episodes . your speech was and still inspiring me . thank you so much sir

R. said...

Dear Sir,

Greetings !

Your program "Kalloori Kaalangal" is very informative and useful.

If i had an opportunity of hearing this program before 10 years, i would have definitely achieved something more than today.

Please tell some professional opportunities in the field of professional courses
like Chartered Accountant and Cost Accountant.

It will be very helpful for me.

I once again thank you for the all support you are extending to build better career.

Thanks and regards

Kavitha R
Mysore

Unknown said...

Thanks father

Unknown said...


பாலில் கலந்த உள்ள நெய் போல்!
தங்கள் மக்கள் அனைவருக்கும் சொர்க்கத்தை காட்டி உள்ளீர்கள்! நன்றிகள். பல கோடி!👍💐💐💐💐

Unknown said...

A.T.P.Senthil kumaran ph-9442255015 Murugappa jewellers,madurai-9

Unknown said...

A.T.P.Senthil kumaran ph-9442255015 Murugappa jewellers,madurai-9

Unknown said...

சார் தாங்கள் இமெயில்முகவரி தெரியவில்லை எனது மகள் மேல் படிப்புக்கு வழிகாட்டுங்கள் +2வில் CBSE 396 ம் political science 93 மார்க் சென்னையில் மதுரை எந்த காலேஜ்ஜில் சேர்க்க தயவு செய்து வழிகாட்டுங்கள் நன்றி

Unknown said...

A.T.p. senthilkumaran

Unknown said...

manithanukkuria ilakkanagalodu vazhum oruvar

Sakthi said...

Inaiyatra Iraianbae! Vazhha Nin Naerkonda Atchipaniyudan Ilakkiyappani - SAKTHI

fattimzakowski said...

JSTOR: Casino, Hotel, and Gaming | JTHub
The JSTOR Casino and 강릉 출장마사지 Hotel 충청남도 출장샵 in Las Vegas, 경상남도 출장샵 Nevada is 제주도 출장샵 a Wedding Venue located on the famous 사천 출장마사지 Strip in Paradise, Nevada. Located inside the hotel,